Tuesday, May 6, 2008

சிறந்த ஊத்தல்கள்(சினிமா)

தமிழில் இப்போது வரும் படங்களைப் பார்க்கும்போது சில உண்மைகள் புரிகிறது.சில படங்கள் ஏன் ஓடுகிறது ,சில படங்கள் ஏன் ஓடவில்லை(ஒடவிடுவதில்லை) என்பது புரியவில்லை.எதனால் இப்படி?
  • 1.தொலைக்காட்சி உரிமை வரப்போகும் படங்களின் உரிமையை போட்டி போட்டு வாங்கும் சேனல்கள் அப்படம் "டப்பா"படமானாலும் டாப் டென்னில் முன்னிலைப்படுத்துவது,மற்ற படங்களை மட்டம் தட்டுவது
  • (எ.கா.)தெனாலி,மின்னலே போன்ற படங்கள் ஹிட் ஆனாலும் முக்கிய சேனல் இருட்டிப்பு செய்தது.அதையும் மீறித்தான் அவை ஹிட் ஆனது
  • விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் (விதிவிலக்கு - வசிகரா,சச்சின்),சிம்பு படங்கள் எப்படி இருந்தாலும் மேலே தூக்கி விட தவறவில்லை
  • இதில் பாவப்பட்டது கமல் & அஜித் மட்டுமே,இவர்களுக்கு எப்போதாவது ஒரு படம் ஹிட் ஆகும் ஆனால் அதுவும் இந்த சேனல் போட்டியில் சிக்கி விடும்
  • 2. நடிகர்களின் மூடநம்பிக்கை ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆனால் அதன் பிறகு அதே போல் பல படங்கள் வந்துவிடும்.(உதாரணம்)காதல் கோட்டை ,பூவே உனக்காக காலத்தில் அதே போன்று பல படங்கள் வந்தன ஆனால் வென்றவை ?
  • திருப்பாச்சி,சிவகாசி வெற்றியை பார்த்து திருப்பதி நடித்தார் அஜித்,மொட்டை போடததுதான் பாக்கி.விஜய் ஆதி எடுத்தார்,மீதி நடந்தது எல்லோருக்கும் தெரியும்.
  • (மீண்டும் வருவேன்...)

No comments: